படித்து டாக்டர் பட்டம் வாங்கிய காமெடி நடிகர் சார்லி..! நெகிழ வைத்த கடின உழைப்பு!

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி 'முனைவர்' பட்டம் பெற்றுள்ளார்.


தமிழ் திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் சார்லி இவரது இயற்பெயர் மனோகர் ஆங்கில திரைப்பட நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக தனது பெயரை திரைப்படத்திற்காக சார்லி என்று மாற்றிக் கொண்டுள்ளார். தமிழில் பாலச்சந்தர் இயக்கிய 'பொய்க்கால் குதிரை' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

இதுவரை சுமார் 800 படங்களுக்கு மேல் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார். இவரது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி. இவர் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ முடித்துள்ளார்.

தற்போது 59 வயதான அவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 12வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடிகர் சார்லிக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளார்.