பகுத்தறிவு உடன்பிறப்பே வா.. வா... சபரீசனுக்கு மாலை போட்டு வாழ்த்து தெரிவிக்க வா!

கருணாநிதிக்கு சொந்தமான தி.மு.க. கட்சிக்கு ஒரு தனி குணம் உண்டு.


யாருக்காவது மரியாதை கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், கன்னாபின்னாவென்று கொடுப்பார்கள். அப்படித்தான் உதயநிதிக்கு மரியாதை செலுத்த, தமிழகமெங்கும் இருந்து உடன்பிறப்புகள் ஓடோடி வருகிறார்கள். 

இந்த நிலையில் நேற்று உடன்பிறப்புகளுக்கு தி.மு.க.வில் இருந்து மீண்டும் அழைப்பு. ஆம், அந்தக் கட்சியின் மனசாட்சி என்று புகழப்படும் சபரீசனுக்கு பிறந்த நாளாம் இன்று. அதனால், எல்லோரும் அவரை வாழ்த்தியே ஆகவேண்டும் என்று வாய்மொழி உத்தரவு போனது.

ஸ்டாலினை சந்திப்பதற்கு மொத்தம் இரண்டே வழிதான். ஒன்று உதயநிதி மூலம் போக வேண்டும் அல்லது சபரீசன் மூலம் போக வேண்டும். அதனால், இந்த டீமை வளப்படுத்துவதற்குத்தான் இன்று பிறந்த நாள் விழாவை அஃபீஷியாக தலைமை கொண்டாடியதாம்.

இதற்காக நகரில் பல இடங்களிலும் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. காலையில் இருந்து கால் கடுக்க நின்று வாழ்த்துக்களை பெற்று வருகிறார் சபரீசன். போன வருடம்கூட இப்படி ஒரு கொண்டாட்டம் இல்லை, ஏன்னா, இப்பத்தானே சபரீசன் மாஸ்ன்னு தெரிய வந்திருக்கு