சென்னையில் சத்குருவின் சாம்பவி மஹாமுத்ரா யோகா வகுப்பு! 6 வருடத்திற்கு பிறகு நல் வாய்ப்பு!

சென்னையில் சத்குருவுடன் ஈஷா யோகா கற்றுக்கொள்ள வாருங்கள் டிச.18, 19 தமிழிலும், 21, 22 ஆங்கிலத்திலும் நடக்கிறது.


ஈஷா யோகா மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் ஈஷா யோகா வகுப்பு இம்மாதம் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. சத்குரு அவர்களே நேரடியாக நடத்தும் இவ்வகுப்பில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் இன்று (டிசம்பர் 13) நடைபெற்றது. இதில் ஈஷா யோகா மையத்தின் சென்னை ஒருங்கிணைப்பாளர் திரு. லோக்நேத்ரா, அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் எலும்பியல் மருத்துவ நிபுணரும் ஈஷா தன்னார்வலருமான டாக்டர் திரு.சுந்தர் குமார், ஈஷா தன்னார்வலர் திரு.ராஜ் சீத்தாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஈஷா யோகா வகுப்பு தொடர்பாக திரு.லோக்நேத்ரா அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சத்குரு அவர்கள் அறிவியல்பூர்வமாக வடிவமைத்துள்ள ஈஷா யோகா வகுப்பு இந்தியாவின் அனைத்து ஊர்களிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இவ்வகுப்பால் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலன் அடைந்துள்ளனர். 

கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சத்குரு அவர்கள் நேரடியாக ஈஷா யோகா வகுப்பை இம்மாதம் நடத்த உள்ளார். இவ்வகுப்பு மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் டிசம்பர் 18, 19 தேதிகளில் தமிழிலும், டிசம்பர் 21, 22 தேதிகளில் ஆங்கிலத்திலும் நடக்க உள்ளது.

ஒன்றரை நாள் நடக்கும் இவ்வகுப்பில் ‘ஷாம்பவி மஹாமுத்ரா’ என்ற மிகவும் எளிமையான, அதேசமயம் மிகவும் சக்திவாய்ந்த யோக க்ரியா கற்றுக்கொடுக்கப்படும். இந்த க்ரியாவை தினமும் பயிற்சி செய்வதன் மூலம் வெளி சூழல் எப்படி இருந்தாலும், ஒருவர் உள்நிலையில் அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ முடியும்.

மன அழுத்தம், கோபம் ஆகியவற்றால் பாதிக்கப்படாமல் மனதை சமநிலையாகவும், உடல் மற்றும் மனதை அதன் முழு திறனை பயன்படுத்தி விழிப்புணர்வான வாழ்க்கை வாழ முடியும். இந்த வகுப்பு எந்த ஒரு மதத்தையும் சாராமல் விஞ்ஞானப்பூர்வமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சத்குரு அவர்களிடம் இருந்து நேரடியாக யோகா கற்றுக்கொள்ளும் இந்த அரிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். பாதுகாப்பு படை வீரர்கள், காவல்துறையினர் மற்றும் மாணவர்களுக்கு வகுப்பு கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

இவ்வகுப்புக்கு முன்பதிவு அவசியம். கூடுதல் தகவல்களுக்கு isha.sadhguru.org/chennai-tamil என்ற இணையதள முகவரிக்கு சென்றோ அல்லது 83000 37000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு திரு.லோக்நேத்ரா அவர்கள் கூறினார். 

அப்போலோ மருத்துவர் டாக்டர் திரு.சுந்தர் குமார் கூறுகையில், “யோகா செய்வதால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏராளமான பலன்கள் பெற முடியும் என்பதை நவீன மருத்துவம் அறிவியல்பூர்வமாக நிரூபித்துள்ளது. நான் 1996 ஆண்டு ஈஷா யோகா வகுப்பில் பங்கேற்றேன்.

அந்த பயிற்சியை தொடர்ந்து வருகிறேன். இதனால், என் வாழ்வில் பல பலன்களை பெற்றுள்ளேன். குறிப்பாக, தெளிவும், கூர்ந்து பார்க்கும் அறிவும் கிடைத்துள்ளது” என்றார்.