மீண்டும் விடுதலைப் புலிகள் அட்டாக் ஆரம்பம்... அதிரும் இலங்கை

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இலங்கையில் மீண்டும் துப்பாக்கி சத்தம். இரண்டு போலீஸ்காரர்கள் சுட்டுக்கொல்லப்படவே, அதிர்ந்து நிற்கிறது இலங்கை.நார்வேயில் தலைமறைவாய் வாழும் பொட்டு அம்மான் உத்தரவின் பேரில்இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு, இரண்டு போலீஸ்காரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளிவர, ,இலங்கை முழுவதும் பய ரேகை படர்ந்துள்ளது. 


இலங்கை மட்டக்கிளப்பில் இருக்கிறது வவுணத்தீவு பாலம்இங்கு செக்போஸ்ட் பணியில் இருந்த இரண்டு போலீஸ்காரர்கள்தான் கடந்த 30ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். கைகளைக் கட்டிப்போட்டு, கத்தியால் வெட்டி, துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்கள். வழக்கமாக இது விடுதலைப்புலிகளின் பழி வாங்கும் ஸ்டைல். கொலை செய்ததுடன் நில்லாமல் ஆயுதங்களையும் கொள்ளை அடித்துப் போயிருக்கிறார்கள்


மாவீரர் நாள் கொண்டாட்டத்தைத் தடுக்க சிங்கள போலீஸார் கடுமையாக கட்டுப்பாடுகள் விதித்தார்களாம்.இதனைத் தாங்கிக்கொள்ள முடியாமல்பதுங்கியிருந்த விடுதலைப்புலிகள் பாய்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக முன்னாள் புலிகள் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தாலும், இதுவரை உண்மை தெரியவில்லை.

இந்த நிலையில், இந்த கொடூர கொலைக்குப் பின்னே நார்வேயில் மறைந்திருக்கும் பொட்டு அம்மான் உத்தரவு இருப்பதாகமுன்னாள் விடுதலைப்புலிகளின் தளபதி கருணா சொல்லியிருப்பது இலங்கை அரசியலை மேலும் சூடாக்கியுள்ளது.

பொட்டு அம்மான் போன்ற அத்தனை தலைவர்களும் இறுதிப் போரில் மரணம் அடைந்துவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில்,சமீபத்தில் சுப்பிரமணிய சுவாமி ஒரு ட்வீட் போட்டிருந்தார்அதில், ‘விடுதலைப் புலிகளின் மிக முக்கிய தளபதி ஒருவர் நார்வேயில் தலைமறைவாக ரகசிய சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியிருந்தார்அதனையே கருணாவும் கூறியிருப்பதால்தான் சிங்களர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

ஆனால்முன்னாள் விடுதலைப்புலிகள் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக மறுக்கிறார்கள். ’’இது கருணாவின் வேலைதான்.விடுதலைப்புலிகள் பெயரைச் சொல்லி கருணாவின் ஆட்கள் கொலை செய்கிறார்கள்ராஜபக்‌ஷே மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்றால் மக்களுக்கு புலிகள் பற்றிய பயம் வரவேண்டும்அதற்காகவே கருணா இதுபோன்ற கொடூரங்களை அரங்கேற்றி வருகிறார்.இந்த பிரச்னையில் கருணா சிக்கப்போவது உறுதிபொட்டு அம்மான் இப்போது உயிருடன் இருப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.புலிகளின் தலைவர்கள் அத்தனை பேரும் வீர மரணத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதுதான் உண்மை என்றும் சொல்கிறர்கள்.

சிங்களர் கொடுமையால் நொந்துபோயிருக்கும் தமிழர்கள் மத்தியில் இந்தக் கொலை திடீர் நம்பிக்கை விதைத்துள்ளதுபுலிகள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தாலே சிங்கள படை அத்துமீறி நடக்காது என்கிறார்கள்.