அவசரமாக கழிப்பறைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பனாராஸ் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவி அங்குள்ள கழிப்பறைக்கு செல்ல முயன்றுள்ளார்.


அப்போது அவரை தடுத்த காவலர்கள் நீ இங்குள்ள கழிப்பறைக்கு செல்லக்கூடாது வேறு எங்காவது சென்று அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தி கொள் என்று கூறினார். இந்தியாவில் கழிப்பறைக்கு சென்ற மாணவாயை நீ தாழ்ந்த சாதி என கூறி அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தார்.புகாரில் அவர் என்னை சாதி தன்மையை பாகுபாடு பார்த்து கழிப்பறைக்குள் அனுமதிக்க மறுத்தனர். இது மனித தன்மையற்றது மற்றும் சட்ட விரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதைதொடர்ந்து அந்த காவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் அந்த பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.