காலேஜ் போய்ட்டு வந்துடுறேன்..! ஆனால்..! மாயமான அய்யம்பேட்டை வினோதினி..! அதிர்ச்சியில் போலீஸ்!

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் கல்லூரிக்கு சென்ற மகள் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தந்த புகாரில் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்


தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் கூலித்தொழிலாளி தியாகராஜன், மங்களம் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களின் மகள் வினோதினி தஞ்சை கல்லூரியில் பி.பி.ஏ. படித்து முடித்து விட்டு பல இடங்களுக்கு வேலைக்காக விண்ணப்பித்து உள்ளார். 

 இந்நிலையில் கல்லூரிக்கு சென்று கல்வி உதவித் தொகை வாங்கி வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி சென்ற வினோதினி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் விநோதினியை தேடிய பெற்றோர் கிடைக்காமல் போகவே அய்யம்பேட்டை காவல்நிலையத்தில் அவரது தாயார் மங்களம் புகார் அளித்தார்.

புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் வழக்குப் பதிந்து விநோதினியை தேடி வருகின்றனர். வினோதினியின் நண்பர்கள், கல்லூரியில் கூட படித்தவர்கள் என அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. வினோதினி கடத்தப்பட்டாரா அல்லது காதல் விவகாரமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.