கோவை ராஜேஸ்வரியின் ஒற்றைக் கால் வெட்டி அகற்றம்..! உதவி கேட்டு கதறும் குடும்பம்! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

கோவை விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.


கோவையை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (30 வயது). இவரை நம்பி ஒரு குடும்பமே உள்ள நிலையில், தினசரி வேலைக்குச் சென்று வந்த  ராஜேஸ்வரிக்கு பெரிய ஆபத்து நிகழ்ந்தது. ஆம், சாலையோரம் நடப்பட்டிருந்த அஇஅதிமுக கொடிக்கம்பம் ஒன்று சாலையில் சென்ற ராஜேஸ்வரி மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ராஜேஸ்வரி மீது சாலையில் சென்ற லாரி ஒன்று ஏறி நசுக்கியது.

இரண்டு கால்களும் இழந்த நிலையில் வலியில் கதறி துடித்த ராஜேஸ்வரியை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 2 கால்களையும் இழந்து வாடியவருக்கு தற்போது ஆறுதல் தரும் வகையில் இடது கால் பகுதியில் செயற்கைக் கால் பொருத்தப்பட்டுள்ளது.

இதேபோல, வலது காலுக்கும் விரைவில் செயற்கைக் கால் பொருத்த வேண்டும் என, அவரது பெற்றோர் எதிர்பார்ப்பு தெரிவிக்கின்றனர். மகளின் சிகிச்சைக்காக, கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதி திரட்டும் பணியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.