பெட்ரோல் பங்க் பெண்கள் உடை மாற்றும் வீடியோ! செல்போன் வைத்த 3 பேர் சொன்ன பகீர் தகவல்! கோவை பரபரப்பு!

கோவையில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர்களை ஆபாசப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மூவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


கோவையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் அறையில் அவர்களுக்கே தெரியாமல் பல நாட்களாக செல்போனை வைத்து வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவு ஏற்றியுள்ளனர். இந்நிலையில் அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

கோவையில் கண்ணப்பநகரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது.பங்குகளில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏராளமான பெண்கள் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பணிக்கு வந்த பின்னர் வீட்டில் இருந்து அணிந்து வரும் உடைகளை மாற்றி விட்டு பெட்ரோல் பங்கில் கொடுக்கும் உடைகளை அணிவது வழக்கம். 

இவ்வாறு பெண்கள் தங்களது உடைகளை மாற்றுவதற்காக ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் தனியாக பெண்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த சுபாஷ் என்பவர் பெண்கள் உடை மாற்றும் அறையில் தனது செல்போனை வைத்து அவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்துள்ளார். இதை தெரிந்து கொண்ட பெண் ஊழியர் ஒருவர் தனது கணவரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அவரது செல்போனை வாங்கி அந்த வீடியோவை அளித்துள்ளனர். இந்நிலையில் சுபாஷ் இந்த மாதிரியான செயலில் ஈடுபடுவதை அறிந்த பெட்ரோல் பங்க் நிர்வாகம் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது. பின்னர் காவல்துறையிலும் புகார் அழித்து விடுவோம் என மிரட்டியும் அனுப்பியுள்ளனர். இதையடுத்து சில நாட்கள் கழித்து சமூக வலைதளங்களில் பல பெண்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

இதையடுத்து அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பங்கில் வேலை செய்யும் பெண்கள் உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் அந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் திருச்சியைச் சேர்ந்த சுபாஷ் மற்றும் மணிகண்டன் மருதாச்சலம் ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மணிகண்டன் என்பவர் வீடியோவை தனது நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோவானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஆபாச படத்தை வெளியிட்டு பெண்களை மானபங்கம் படுத்துதல், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.