பெல்ட்டால் அடித்து நைட்டியுடன் புது மனைவியை விரட்டிய கணவன்! அதிர வைக்கும் காரணம்! கோவை சம்பவம்!

கோவையில் சிறுவயது காதலை ஒப்புக்கொண்ட புது மனைவியை திருமணம் ஆன ஒரே வாரத்தில் கணவன் பெல்ட்டால் அடித்து துரத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.


கோவை இடையர் பாளையத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் சௌமியா என்ற 32 வயது கல்லூரி பேராசிரியையை காதலித்து வந்தார் காதலுக்கு பெண்வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சௌமியா வீட்டைவிட்டு சார்லஸ் வீட்டுக்கு ஓடி வந்து விட்டார்.

சார்லஸின் பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். அப்போது தெரியவில்லை சௌமியாவுக்கு தான் நிற்கதியாய் நிற்கப் போவது. திருமணமான ஒரு வாரத்தில் சார்லஸ் சௌமியாவின் இளவயது கதைகளை கேட்டார் 

ஆர்வமாக தனது கதையை சொல்ல தொடங்கிய சௌமியா ஆர்வமிகுதியால் தான் இள வயதில் ஒருவரை காதலித்து தோல்வி அடைந்த கதையையும் தெரிவித்தார் அதை சார்லஸ் இயல்பாக எடுத்துக் கொள்வார் என்ற சவுமியாவின் எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது 

அதை சந்தேகத்துடன் எதிர்கொண்ட சார்லஸ் சௌமியாவை சரமாரியாக பெல்ட்டால் விளாசியதோடு திருமண ரிசப்ஷனுக்கு செலவு செய்த ஒரு லட்சம் ரூபாயை தாய் வீட்டிலிருந்து பெற்று வருமாறு கூறி துரத்தி அனுப்பினார் 

இதையடுத்து நைட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறிய சௌமியா அந்த வழியாக சென்ற ஒருவரின் செல்போனை வாங்கி தனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் உடனடியாக வீட்டுக்கு வருமாறு அழைத்தனர் தற்போது தனது தாய் தந்தையுடன் தான் வசித்து வருவதாக சௌமியா  காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்