பஸ் பாஸ் வழங்கும் அதிகாரி ஆபாச பேச்சு! மயங்கி சரிந்த மாணவி! கோவை விபரீதம்!

கோவையில் மாதாந்திர கட்டண சீட்டு வாங்க வரும் மாணவர்களை ஆபாசமாக வசைப்பாடியப் போக்குவரத்து அதிகாரி, பாதிக்கபட்ட மாணவியின் பெற்றோர் அதிகாரியை நேரில் சென்று விலாசியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்ப்டுத்தியது.


கோவை நங்கநல்லூர், போக்கு வரத்து பயணசீட்டு பெறும் அலுவலகத்தில் மாணவர்கள் மாதாந்திர பயணச்சீட்டு வாங்க வருவது வழக்கம், ஆண் பெண் எனத் தனியாக வரிசைகள் இருந்தது இல்லை.இந்த நிலையில் சக பயண சீட்டு வாங்க நின்றுக்கொண்டிருந்த போது மாணவருடன், மாணவியை இணைத்து ஆபாசாமாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனால், மன ரீதியாக பாதிக்கபட்ட மாணவி, கல்லூரியில் மயங்கி விழுந்ததை அடுத்து பெற்றோருக்கு தகவல் சொல்ல அதிர்ந்துபோன பெற்றோர் நேராக அதிகாரியை பிடித்து விலாசினர்.

இது குறித்து, நேரில் விசாரிக்க வந்த பெண்ணின் பெற்றோர் சம்மந்தபட்ட அதிகாரியை, கண்டித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதில் சிறிது நேரம் அப்பகுதி பரபராப்பாக காணப்பட்டது.இந்த காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.