என் காதலை அவன் ஏற்கவில்லை! நடுரோட்டில் தீக்குளித்த கல்லூரி மாணவி! அதிர்ச்சியில் உறைந்த கோவை!

கோவையில் காதல் விவகாரத்தில் மனமுடைன்ந்த இளம் பெண் தீக்குளித்து உயிருக்கு போராடும்.நிலையில் உள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த பி.எஸ்.ஜி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி .காம் படித்தும் வரும் மாணவி, அதே கல்லூரியில் படிக்கும் மற்றொரு மாணவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

ஒரு தலை பட்சமாக காதலித்து வந்த மாணவி பல முறை இது குறித்து அந்த நபரிடம் பேசியும் அவர் பிடிக்கொடுக்க வில்லை என கூறப்படுகிறது. காதலை ஏற்க்க மறுக்கும் மாணவரை மிரட்டும் தோரணையில் மாணவி தான் தங்கியிருந்த விடுதிக்கு அருகிலேயே, பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டுள்ளார்.

தீ உடல் முழுவதுமாக பற்றி எரிந்ததால் சுமார் 90% தீக்காயத்துடன் மாணவி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.