குத்துச் சண்டை டிரெய்னிங்னு சொல்லி, மாஸ்டர் கண்ட கண்ட இடத்துல கை வைக்குறாரு..! கலங்கிய இளம் மாணவிகள்!

கோவை: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பாக்சிங் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டார்.


கோவை மாவட்டம், பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிபு. இவர் அப்பகுதியில் உள்ள தனியார் காலேஜில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். படிப்பு நேரம் போக, மற்ற நேரம் இவர், கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் பாக்சிங் பயிற்சி பள்ளியில் உதவி பயிற்சியாளராக பணிபுரிகிறார்.  

இந்நிலையில், இங்கு பயிற்சிக்கு வரும் பெண்களிடம் சிபு அத்துமீறி நடந்துகொள்வதாகக் கூறி அவர் மீது பலரும் புகார் தெரிவித்து வந்தனர். எனினும், சம்பந்தப்பட்ட பாக்சிங் பயிற்சி பள்ளி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளவில்லையாம். இந்நிலையில், சிபு மீது ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போலீஸ் புகார் தரப்பட்டுள்ளது.  

இதன்பேரில் குற்றச்சாட்டை உறுதி செய்த ராமநாதபுரம் போலீசார், சம்பந்தப்பட்ட சிபுவை போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.