கூட்டு குடும்பம்..! குழந்தைக்கு ஏற்பாடு செய்ய முடியல..! விரக்தியில் புதுமணத் தம்பதி எடுத்த பகீர் முடிவு! கோவை அதிர்ச்சி!

திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகியும் குழந்தை பிறக்காததால் தம்பதி தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் கோவை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.


கோவை கணியூர் அருகே பொன்னான்டாம் பாளையம் தனியார் நிறுவன ஊழியரான கேசவராஜ், கீர்த்திகா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஆண்டுதான் திருமணம் நடைபெற்றது.  

இந் நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் இவர்கள் வீட்டில் படுக்கை அறை கதவு காலையில் திறக்கப்படவில்லை. முதலில் கதவை தட்டி பார்த்த பெற்றோர் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். 

அப்போது கேசவராஜூம், மனைவி கீர்த்திகாவும் ஒரே கயிற்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நேற்று வரை நன்றாக இருந்த தம்பதி இப்படி தவறான முடிவு எடுத்துவிட்டார்களே என கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் கேசவராஜூக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் கணவன், மனைவி இருவரும் மன வேதனையுடன் இருந்ததாக தெரியவந்துள்ளது. குழந்தை பிறக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் திருமணம் ஆகி ஒரே ஆண்டில் குழந்தை இல்லாத காரணத்தால் இப்படி விபரீத முடிவு எடுத்திருக்க வாய்ப்பில்லை என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.