இரட்டை தேங்காய்! மரத்திலேயே பழுக்கும் 25கிலோ பழம்! 125 ஆண்டுகால அதிசய மரம்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிகம் காணப்படும், அதே சமயத்தில் கொல்கத்தாவில் வளர்ந்து வரும் ஒரே ஒரு இரட்டை தேங்காய் காய்க்கும் தென்னை மரத்தை பாதுகாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.


125 ஆண்டுகள் பழமைவாய்ந்த இரட்டை தேங்காய் காய்க்கும் தென்னை மரம் கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள செச்சலஸ் பகுதியில் மட்டுமே அதிகம் காணப்படும். ஆங்கிலேயர் ஆட்சியில் மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் உள்ள ஆச்சார்யா ஜகதீஷ் சந்திரபோஷ் தாவரவியல் பூங்காவில் ஒரு தென்னை மரம் நடப்பட்டது.

இந்த பிரத்யேக தென்னை மரம் சுமார் 1,200 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து, இரட்டை தேங்காய்களை காய்க்கக் கூடியது. இந்த அதிசய தென்னை மரம் தற்போதும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரட்டை தேங்காய் காய்க்கும் தென்னை மரத்தில் 94வது வயதில் பூக்களை பூக்க தொடங்கியது.

2006ல் இலங்கையில் இருந்தும் 2013ம் ஆண்டு தாய்லாந்தில் இருந்தும் இவ்வகை மரத்திலிருந்து மகரந்தம் கொண்டு வரப்பட்டு செயற்கை மகரந்த சேர்க்கை இந்த பெண் மரத்தில் நடைபெற்றது. இதனால் இந்த மரம் காய்களை காய்க்க தொடங்கியது. ஆனால் சில ஆண்டுகளிலேயே இரட்டை தேங்காய் மரம், காய்களை காய்ப்பதை நிறுத்தியுள்ளது.

புதிதாக தென்னங்கீற்று ஓலைகளும் உருவாவது நின்று ஏற்கனவே இருந்த ஓலைகள் பழுப்பு நிறத்துக்கு மாறி வருகிறது. இந்தியாவில் இந்த ஒரு மட்டுமே இருப்பதால், இம்மரத்தை பாதுகாக்க போராடும் விஞ்ஞானிகள், செயற்கை முறையில் மரத்தில் காய்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.