சென்னை: சினிமா இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித்தை, சக இயக்குனர் லீலா மணிமேகலை காரசாரமாக விமர்சித்துள்ளார்.
தலித் திரைப்படங்கள்..! இயக்குனர்கள் ரஞ்சித், வெற்றிமாறன் மீது பாய்ந்த பெண் எழுத்தாளர் லீனா மணிமேகலை!
வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் படம் பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. இதேபோல, பா.ரஞ்சித் இயக்கிய காலா, கபாலி போன்ற படங்களின் கதையம்சத்தையும் அசுரன் படத்துடன் ஒப்பிட்டு நாளிதல் ஒன்றில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார்.
அந்த கட்டுரையை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லீலா மணிமேகலை ஷேர் செய்துள்ளார். அதன் மேலே, ''அசட்டு வன்முறை காட்சிகளை காட்டினால் அது அரசியல் சினிமா ஆகிவிட முடியாது என காலாவை நான் விமர்சித்ததற்காக, எனது நண்பர் பா.ரஞ்சித் ட்விட்டரில் என்னை அன்ஃபாலோ செய்தார்.
இப்போது இந்த வரிசையில் அசுரன் இணைந்துள்ளது. கபாலி, காலா, அசுரன் படங்களின் கதையம்சம் மிக வன்முறையாக உள்ளது. வெகுசன சினிமா மீதிருக்கும் ரசிக ஜொள்ளுகள் அங்கிங்கெணாதபடி எங்கும் வியாபித்திருக்கும் வரை அசலான கலையாக சினிமா தமிழ்ச் சமூகத்தில் உருவெடுப்பதற்கு சாத்தியங்கள் மிக அரிது. கபாலி, காலா, அசுரன் படங்களுடன் ஒப்பிடுகையில் பாட்ஷா படம் கூட பரவாயில்லை. ஏனெனில் அது அரசியல் சினிமாவாக பம்மாத்து செய்து யாரையும் ஏமாற்றவில்லை,'' என விமர்சித்துள்ளார்.
லீலா மணிமேகலையின் கருத்து தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.