முதல்வர் எடப்பாடி தல தோனிக்கு ட்விட்டரில் தன்னுடைய அன்பான பாராட்டை தெரிவித்திருக்கிறார்..!

இந்தியா முழுவதும் தோனியின் ஓய்வு விவகாரம்தான் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.


தனக்கு மிகவும் பிடித்தமான, ‘மே பல் தோ பல்...’ என தொடங்கும் பாடலை சொல்லி, அதாவது, ’ஓரிரு தருணங்களுக்கு மட்டுமே நான் ஒரு கவிஞன், எனது கதை இன்னும் ஓரிரு தருணங்களே நீடிக்கும்’ என்று கவிதை நடையில் தன் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

2004 டிசம்பரில் ஆரம்பித்த தோனியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் சிறப்பாக இருக்கவில்லை. ஆம், வங்கதேச அணிக்கு எதிரான தனது அறிமுக ஒருநாள் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகி தோனி வெளியேறினார். தொடர்ந்து விளையாடிய போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் எடுக்காத தோனி, 2005ல் விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி 148 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்

2011-ஆம் ஆண்டு நடந்த ஐசிசி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், சற்றும் எதிர்பாரா விதமாக ஐந்தாம் நிலை பேட்ஸ்மேனாக களமிறங்கி தனது அதிரடி பேட்டிங்கால் 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒர் உலக கோப்பையை இந்தியா வெல்ல தோனி முக்கிய காரணமாக இருந்தார். பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட்கீப்பராக சிறப்பாக பங்களித்த தோனிக்கு சிறப்பு சேர்த்தது அவரது கேப்டன்ஷிப் தான். 2007 டி20 மற்றும் 2011 ஐசிசி உலக கோப்பைகளை தோனியின் தலைமையில் இந்தியா வென்றது.

அதேபோல், 2013 ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையையும் தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. மேலும் அவர் தலைமையேற்ற இந்திய அணி இருமுறை ஆசிய கோப்பையை வென்றது. அதேபோல் தொடர்ந்தது. 2010, 2011 மற்றும் 2018 ஆகிய மூன்று ஐபிஎல் தொடர்களை அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வென்றது.

சென்னையில் வைத்து தனது ஓய்வை அறிவித்திருக்கும் தோனிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் தன்னுடைய அன்பை தெரிவித்திருக்கிறார். 331 இண்டர்நேஷன்ல் விளையாட்டுகளில் விளையாடி, மூன்று சேம்பியன்ஷிப் கோப்பைகளை வென்ற கூல் கேப்டன் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பாராட்டியிருக்கிறார்.