உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்மலா தேவியை சுமார் ஒரு மணி நேரம் நீதிபதிகள் ரகசியமாக விசாரித்துள்ளனர்.
மூடிய அறைக்குள் 1 மணி நேரம்! திணறிப்போன நிர்மலா தேவி! அடுத்து சிக்கப்போவது யார்?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் ஓராண்டுக்கு பிறகு நிர்மலா தேவி ஜாமீனில் வெளியே வந்தார். அவர் மீதான வழக்கை விசாரிக்கவும் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில் நிர்மலா தேவி மீதான வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அரசு வழக்கறிஞர் முறையிட்டார். அப்போது இந்த வழக்கில் நிர்மலா தேவியிடம் தாங்கள் சில தகவல்களை பெற வேண்டி உள்ளதாக நீதிபதிகள் கூறினர்.
இதனை தொடர்ந்து நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் நிர்மலா தேவி இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜரானார்.
ஆஜரான நிர்மலா தேவியிடம் நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு சுமார் ஒருமணி விசாரணை நடத்தியது. மூடிய அறைக்குள் நடைபெற்ற இந்த விசாரணையின் போது நிர்மலா தேவியிடம் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்விகளை எல்லாம் எதிர்கொள்ள முடியாமல் நிர்மலா தேவி திணறியதாக கூறப்படுகிறது. பிறகு நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாமல் உண்மையை மறைக்காமல் அவர் பதில் அளித்ததாகவும் சொல்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.