சர்க்கஸ் நிகழ்ச்சியின்போது பயிற்சியாளரின் கழுத்தை மலைப்பாம்பு இறுக்கியதால் அவர் உயிரிழந்தார்.
மலைப்பாம்புடன் சாகசம்! விபரீதத்தில் முடிந்த இளைஞரின் வாழ்க்கை! வைரல் வீடியோ!

அதிர்ச்சியளிக்கும் இச்சம்பவம் ரஷ்யாவில் உள்ள ஒரு இடத்தில் நடந்துள்ளது. ஆனால் அது எந்த இடம் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவில்லை. சர்க்கஸ் நிகழ்ச்சியை பார்க்க குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அந்த இடத்தில் திரண்டிருந்தனர். அப்போது பயிற்சியாளர் ஒருவர் சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை எடுத்துவந்து மேடையில் போட்டார். இதைக் கண்டு அனைவரும் பயம் கலந்த உற்சாகத்தில் இருந்தனர். அப்போது அந்த பயிற்சியாளர் மலைப் பாம்பை எடுத்து தனது கழுத்தில் சுற்றினார்.
கழுத்தில் மலைப்பாம்பு சுற்றி இருந்தபடி சர்க்கஸ் பயிற்சியாளரும் அனைவரையும் விட்டுக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. மலைப்பாம்பு மெல்ல மெல்ல பயிற்சியாளரின் கழுத்தை இறுக்கத் தொடங்கியது. இதனால் அவருக்கு ரத்த ஓட்டம் நின்று கீழே விழுந்தார். அது கூட சர்க்கஸ் நிகழ்வில் ஒரு அங்கம் தான் என்று நினைத்து அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் அடைந்தனர். ஆனால் சர்க்கஸ் ஊழியர்கள் சிலர் அவரை நோக்கி செல்கையில் தான் விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. அந்த மலைப்பாம்பு கழுத்தை இறுக்கிய தில் சர்க்கஸ் பயிற்சியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அவர் கழுத்தில் சுற்றி இருந்த மலைப்பாம்பை ஊழியர்கள் மீட்டு மீண்டும் கூண்டுக்குள் போட்டனர். இதை பார்த்த அதிர்ச்சியில் அங்கிருந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு உடனடியாக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த சம்பவம் ரஷ்யாவின் போலீசார் கவனத்திற்கு சென்றுள்ளது. ஆனால் இது தொடர்பான புகார்கள் எதுவும் இன்னும் இல்லாததால் அது எந்த இடம் என்பது தொடர்பான விவரங்கள் தெரிய வரவில்லை.