நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை இல்லாத அளவுக்கு மதமும், ஜாதியும் முக்கியத்துவம் வகிக்கிறது. நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சர்ச்களில் ஜெபக்கூட்டம் நடக்கிறது.
மோடியை தோற்கடிக்க ஜெபம் செய்யுங்கள்! பாஜகவிற்கு எதிராக கிறிஸ்தவர்களை தூண்டிவிடும் மத போதகர் மோகன் சி.லாசரஸ்!

அதேபோன்று மசூதிகளில் தொழுகைக்குப் பிறகு, மோடிக்கு ஓட்டு போடக்கூடாது என்று பரப்புரை செய்யப்படுகிறது.
ஏற்கெனவே இந்து கடவுள்கள், கோயில்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அப்போது எந்த மதத்தையும் நான் இழிவுபடுத்திப் பேசவில்லை என்று மன்னிப்பு கேட்டார்.
ஆனால், இப்போது அவர் ஆளும் மோடி அரசு தொடரக்கூடாது என்ற நோக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ படு வைரலாகி வருகிறது. கர்த்தருக்கு யார் மீது விருப்பம் இருக்கிறதோ, அவர் மட்டுமே ஆட்சிக்கு வரமுடியும். கர்த்தருக்கு விருப்பமில்லாத யாரும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் ஜெபம் நடக்கிறது.
நமது ஜெபத்தைத் தாண்டி யாரும் ஆட்சிக்கு வரமுடியாது, அதனால் உங்கள் ஓட்டுக்களை மறந்துவிடாமல் போடுங்கள் என்று கிட்டத்தட்ட லோக்கல் பேச்சாளர் போன்று பரப்புரை செய்துள்ளார்.
நேற்றைய பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டுவது உறுதி என்று அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலே, இப்படி நேரடி எதிர்ப்பை மோகன் சி.லாசரஸ் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.
இந்துக்களை ஒருங்கிணைக்கவும், மத ரீதியான மோதலையும் இந்த வீடியோ ஏற்படுத்தும் என்பதால், உடனே மோகன் சி லாசரஸை கைது செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
நாட்டு நன்மைக்காக ஜெபம் செய்யவேண்டிய ஒரு போதகர், குறிப்பிட்ட கட்சிகளுக்கு எதிராக இப்படி பிரசாரம் செய்யலாமா? புடிச்சு உள்ளே போடுங்க தேர்தல் ஆபிஸர்ஸ்...