த்ரில் அனுபவம் தரும் கூடலூர் கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு விழா!

வரும் 19.04.2019 வெள்ளிக்கிழமை மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.


கேரள அரசுடன் போராடி வருடத்திற்கே ஒரு நாள் மட்டும் விழா நடைபெறும் இக்கோவில் தேனி மாவட்டம் கம்பம் கூடலூரிற்கு தெற்கே உயர்ந்த மலை மீது கடல்மட்டத்திலிருந்து 4380 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் 1800 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டு, குலசேகர பாண்டியன்,  ராஜ ராஜ சோழ மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. 

இக்கோவில் விழாவானது மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அதே நாளில் நடைபெறும். விழாவிற்கு வருகை தரும் அன்பர்கள் ‌தேனி மாவட்டம் கம்பம் வந்து கூடலூர் வழியாக பளியன்குடி சென்று அங்கிருந்து உயர்ந்த வனத்தின் வழியாக 6.6கி.மீ. நடை பயணமாக செல்லலாம்.

வாகனத்தில் வர விரும்பும் அன்பர்கள் கம்பம் குமுளிக்கு பஸ் மூலம் வந்து அங்கிருந்து வாடகை ஜீப்பில் கண்ணகி கோவில் வரை வரலாம். நுழைவு நேரம் காலை 6 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே. பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும்1லிட். 2 லிட் தண்ணீர் பாட்டில்கள் அனுமதி இல்லை. 5 லிட். மட்டும் அனுமதி உண்டு.