சிதம்பரம் மீண்டும் கைது செய்யப்பட்டது ஏன்? காரணம் இது தான்..!

ஜெயிலுக்குள் இருந்தாலும் ட்வீட் போடுவதை சிதம்பரம் நிறுத்தாதது வரை, அவரை ஜாமீனில் வெளியே விடுவதற்கு பா.ஜ.க. தயாராக இல்லை என்று ஒரு கருத்து உலவுகிறது. சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் சிதம்பரத்தை 4வது குற்றவாளியாக சேர்த்துள்ளது. அத்துடன் 9.96 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஒரே ஒரு நாள் கோர்ட்டில் ஆஜராவதற்கு 10 லட்ச ரூபாய் ஃபீஸ் வாங்குவது சிதம்பரத்தின் ஸ்டைல். கோடி கோடியாக சொத்தும், சம்பாதிக்க வாய்ப்புகளும் இருக்கும்போது 10 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டார் என்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது அசிங்கப்படுத்தும் முயற்சி என்பதை தெளிவாகக் காட்டியுள்ளது. 

அதுசரி, இப்போது சிதம்பரம் போட்டிருக்கும் ட்வீட்களைப் பார்க்கலாம். ஏன், பா.ஜ.க.வினர் பதறுகிறார்கள் என்பது புரியும்.

* இந்த இரண்டுப் பொருளாதார அறிகுறிகள் குறித்து தெரியப்படுத்தினால் மக்களே ஒரு முடிவுக்கு வருவார்கள். முதலாவதாக, நாட்டின் ஏற்றுமதி சுமார் 6.6 சதவிகிதமும், இறக்குமதியில் சுமார் 13.9 சதவிகிதமும் குறைந்துள்ளது. இந்த விழ்ச்சியின் அர்த்தம் என்னவெனில், மாதம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்

* வங்கிகளில் கடன் வாங்குவது குறைந்துள்ளது. அதனால் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதங்களில் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால், தற்போது எந்த புதிய முதலீடும் வரவில்லை என்பதாகும்.

* இந்தியாவில் நகர்ப்புற, மற்றும் கிராமப்புறங்களில் தனிமனிதர்களின் நுகர்வு குறைந்துவிட்டது. அதாவது ஏழை மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துவிட்டது.அதனால் குறைவான அளவே நுகர்வு நடைபெறுகிறது. அதனால் நாட்டு மக்கள் அதிகமானோர் தீவிரமான பசியோடு இருக்கிறார்கள். அதன்வெளிப்பாடே பட்டினி நாடுகள் குறியீட்டில் இந்தியா 117 நாடுகளில் 102-வது இடத்திற்குச் சென்றுள்ளது.

இதை எல்லாம் வெளியே வந்து பேசிக்கலாம், முதல்ல வெளியே வா சாரே.