இனி தண்ணீரே தேவையில்லை..! விரைவில் வருகிறது புதிய மாடல் கழிப்பறை..! எப்படி தெரியுமா?

புதிய வகை மாடலில் தயாரிக்கப்பட்ட கழிவறையை சீனாவில் அறிமுகம் செய்து வைத்த பில்கேட்ஸ், சுகாதாரமின்மைக் காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 5 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக வேதனை தெரிவித்தார்.


சீனாவில் பெய்ஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதிய வகை மாடல் கழிவறையை அறிமுகம் செய்துவைத்த பில்கேட்ஸ், உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாப்பான சுகாதாரம் இல்லை என கூறினார். மேலும் கழிவறை உட்பட அடிப்படை வசதிகள் கூட இல்லாத நாடுகள் மற்றும் பகுதிகளுக்கு அவர்களது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருவதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்தார். 

பொதுவாக மனித மலத்தில், 200 டிரில்லியன் ரோட்டா வைரஸ் செல்கள், 20 பில்லியன் ஷிகெல்லா பாக்டீரியா மற்றும் 100,000 ஒட்டுண்ணி புழு முட்டைகள் இருக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட, சுமார் 500,000 குழந்தைகள் இறப்பதற்கு மோசமான சுகாதாரமே காரணம் என கூறினார். மேலும் வெளிப்புறங்களை கழிவறையாக பயன்படுத்துவால், நிலத்தடி நீர் மாசுபட அதிகம் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்ததார்.

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கழிவறை தென்னாப்பிரிக்காவின் டர்பனில் சோதனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பில்கேட்ஸ், இதற்கு தண்ணீர் தேவையில்லை எனவும் சில நேரங்களில் மின்சாரமும் தேவையில்லை எனவும் சூரிய சக்தியில் இயங்கும் எனவும் கூறினார். இந்த கழிவறைகள் மாடல் கழிவுகளிலிருந்து நோய்க்கிருமிகளை அகற்றும் வகையிலான அமைப்புகள் உள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்தார்.