வயிறு வலிக்குதுனு தான் போனேன்..! ஆனால் மர்ம உறுப்பில் சிக்கியிருந்த குண்டுகள்! சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்!

சீனாவில் வயிற்று வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்கள் மர்ம உறுப்பில் காந்த குண்டுகள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


சீனாவின் கூபி மாகாணத்தின் வுகான் பகுதியைச் சேர்ந்த 12 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளான். இந்நிலையில் அவரது பெற்றோர்கள் அவனை பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சாதாரண வயிற்று வலிதான் எனக்கூறி மருந்து மற்றும் மாத்திரைகளை கொடுத்துள்ளனர். பல நாட்களாக மருந்து மற்றும் மாத்திரைகளை உண்டு வந்த சிறுவனுக்கு வயிற்று வலி குறைந்தபாடில்லை. இந்நிலையில் வயிற்றுவலி கடுமையாகவே பெற்றோர்கள் அவனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் இரைப்பையில் பிரச்சினை இருக்கக்கூடும் என சிறுவனின் வயிற்றை ஸ்கேன் செய்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் சிறுவனிடம் நீ ஏதாவது செய்தாயா? என கேட்டனர் அதற்கு அந்த சிறுவன் கடந்த 70 நாட்களுக்கு முன்னர் தனது ஆண் உறுப்பில் சுய இன்பம் காண்பதற்காக இரும்பு குண்டுகளை உள்ளே செலுத்தியதாக தெரிவித்தான்.

அதையடுத்து அதை வெளியே எடுக்க முடியாததால் அப்படியே விட்டு விட்டதாகவும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனே சிறுவனின் வயிற்றில் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர் அப்போது சுமார் 30 குண்டுகள் சிறுவனின் மர்ம உறுப்பில் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

=-அதை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்தால் உயிருக்கே ஆபத்தாகி விடும் என எண்ணி சிறுநீர் பையில் காற்றை நிரப்பி இரும்பு குண்டுகளை வெளியே எடுத்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.