கொரோனா புரட்டிப் போட்டும் அடங்காத சீனர்கள்..! நாயை உயிரோடு சமைத்து சாப்பிட்ட கொடூரம்!

உலகமே கொரோனாவின் கோரதாண்டவத்தில் இருக்க சீனாவில் நாய் உயிருடன் சமைக்கப்படும் வீடியோவை பார்த்து பிரபல கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் மிகவும் கோபமைடந்து அது தொடர்பாக கடுமையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். இது தற்போது இணைய வாசிகளிடம் வைரலாகி வருகின்றது.


உலகையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ள கொடூர கொரோனா முதன் முதலில் சீனாவில் ஹூபே மாகாணத்தில் கண்டறியப்பட்டது. பின்னர் இது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் சீனாவில் விலங்குகள் கொல்லப்பட்டு உணவாக விற்கப்படும் இடத்திலிருந்து தான் கொரோனா முதன் முதலில் பரவியதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சீனாவில் உள்ள மார்க்கெட்டில் சுடு தண்ணீரில் நாய் ஒன்றை உயிரோடு போட்டு உணவாக சமைக்கப்படும் வீடியோ ஒன்றை கண்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் கெவின் பீட்டர்சன் அதிர்ந்து போனார். இதனையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், உலகம் முழுவதுமே மக்கள் தங்கள் வீடுகளுக்குள் அடைபட்டுக்கிடக்கிறார்கள். திருந்த மாட்டிங்களா நீங்கள் என்று மிகவும் கடுமையாக விமர்ச்சித்துள்ளார். மேலும், சீனர்கள் இது போன்ற விலங்குகளை சாப்பிட்டு கொரோனா தொற்றை மற்ற நாடுகளுக்கும் பரப்பிவிட்டார்கள் என மிகவும் ஆதங்கத்துடன் தனது ட்விட்டர் பக்கத்தில் கெவின் பதிவிட்டுள்ளார்.