தாயை மோதிய காரை எட்டி உதைத்து கார் உரிமையாளர் தான் அழுதுகொண்டே சண்டையிட்ட சிறுவனின் வீடியோ பதிவு பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது.
எங்க அம்மாவ என்னடா பண்ணுன? நடு ரோட்டில் சிறுவன் செய்த செயல்! நெகிழ வைக்கும் வீடியோ வைரல்!

சீனாவில் தாய் மற்றும் மகன் இருவரும் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் ஒன்று சிக்னலை கவனிக்காமல் நேராக வந்தது. இதனால் கார் தாயின் மீது மோதியதில், தாய் தூக்கி வீசப்பட்டு சிறிது தூரம் தள்ளி கீழே விழுந்தார். அதிஷ்டவசமாக, இந்த விபத்தினால் தாய்க்கு பெரிதளவில் அடிபடவில்லை.
இருப்பினும் இந்த சம்பவத்தை கண்ட மகன், ஆத்திரத்தில் காரை எட்டி உதைத்துள்ளார். அதே நேரம் அழுது கொண்டே கார் உரிமையாளர்கள் வெளியே வரச்சொல்லி சண்டையிட்டு உள்ளார்.
இதற்கு கார் உரிமையாளர் அதே இடத்தில் மன்னிப்பும் கோரியுள்ளார். இருந்தாலும், தாய் மீது இருக்கும் மிகுந்த பாசத்தால் சிறுவன் இப்படி செய்யும் செயலின் சிசிடிவி பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. மேலும், இந்த வீடியோ பதிவு பார்ப்பவர்களை நெகிழச் செய்துள்ளது. தாய் பாசம் என்றால் என்ன என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோ இருக்கும் என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.