வடிவேல் தோத்தார்டா இவகிட்ட! படித்துறை பாண்டிக்கு போட்டியாக வந்த இளம் பெண்!

நகைச்சுவை நடிகர் வடிவேலு படித்துறை பாண்டி வேடத்தில், வாகனக்கள் முன் விழுந்து பணம் பறிக்கும் நூதன திருட்டுகளில் ஈடுபடுவார், அவை காண்போரை ரசிக்கும்படிதாக அமைந்திருந்தது.


அதே போல சீனாவில், சாலையில் வந்து கொண்டிருந்த லாரியை ஒட்டிய படி பெண் ஒருவர் சைக்கிளை கையில் தூக்கியபடி ஓடி வருவதை பார்த்த ஓட்டுநர் சற்று முன்னதாகவே லாரியை ஸ்லோ பண்ண, இதனை பயன்படுத்திக் கொண்டு அந்த பெண் லாரி டயருக்கு அடியில் தானாக உருண்டு விழுந்து தனக்கு பலத்த காயம் ஏறட்டதாக கூறி பிரச்சனை செய்துள்ளார்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அங்கிருந்த சி சி டி வி காட்சிகளை ஆய்வு செய்த போது அந்த பெண் வேண்டும் என்றே பணம் பறிக்க இந்த நூதன திருட்டு செய்ய முயன்ற சம்பவம் அம்பலமானது. இதனை அடுத்து விசாரணை அந்த பெண்ணுக்கும் ஓட்டுநர் க்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்ததும், மேலும் அவர்களுக்கு கொடுக்கல் வாங்களில் சச்சரவு இருந்து வந்தது தெரிய வந்ததை அடுத்து பெண்ணின் கூட்டு வெளியானது.

உண்மையில் வடிவேலுவின் திரையுலகில் படித்துறை பாண்டி கேரக்டருக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. அதே போல பெண் ஒருவர் சீனாவில் முயற்சி செய்திருப்பது உண்மையில் ஆச்சரியம் தான்.