நட்சத்திர மீனை உயிரோடு சாப்பிட முயன்ற பெண்! பிறகு நேர்ந்த அதிர வைக்கும் விபரீதம்!

ஆக்டோபஸை சாப்பிட முயன்ற பெண் ஒருவர் அதனிடம் சிக்கி அவஸ்தைப் படும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.


இன்றைய காலத்தில், பலரும் புதுப்புது உணவுகளை சாப்பிடுகின்றனர். குறிப்பாக,  சீனர்கள் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த மக்கள், விதவிதமான கடல்வாழ் உயிரினங்களை பச்சையாகக் கூட பயப்படாமல் சாப்பிடுகிறார்கள்.

இதன்படி, சீனப் பெண் ஒருவர் ஸீசைட் கேர்ள் லிட்டில் செவன் என்ற பெயரில் சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். லைவ் கேமிரா முன்பாக நின்றபடி, ஆக்டோபஸை கையில் பிடித்து, வாயில் போட்டு அவர் விழுங்க முயன்றார். ஆனால், எதிர்பாராவிதமாக, ஆக்டோபஸ் தனது விரல்களை பரப்பி, அந்த பெண்ணின் முகம் முழுக்க பசைபோல ஒட்டிக் கொண்டுவிட்டது.

இதனால், அதனை விழுங்க முடியாமல், விரல்களை, பிடுங்க, கடும் வலியுடன் அந்த பெண் போராடி, கன்னம் சிவக்க, ஆக்டோபஸ் பிடியில் இருந்து விடுதலை பெற்றார். இந்த காட்சிகள் அப்படியே நேரலையாக, இணையத்தில் வெளியாக, தற்போது, அதனை பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.