கணவனுடன் தகராறு - கார் மீது ஏறி நின்று சண்டை போடும் கோபக்கார மனைவி - வைரல் வீடியோ

சீனாவில் காரில் செல்லும் போது கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின் காரணமாக ஆத்திரம் அடைந்த மனைவி நடுரோட்டில் காரை நிறுத்தச் சொல்லி காரின் மீது ஏறி நின்று கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.


இந்நிலையில் அதனை வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவருக்கு அபராதம் விதித்தனர்.

சீனாவில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர் அப்போது காரில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது இதனால் இருவரும் வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அவர்களது வாகனம் போக்குவரத்து நெரிசலில் நின்றுகொண்டிருக்கும்போது ஆத்திரம் அடைந்த மனைவி திடீரென காரை விட்டு வெளியே வந்து கணவருடன் சண்டை போட்டுள்ளார். ஆத்திரம் தாங்காத மனைவி காரின் மீது ஏறி நின்று கணவரை கண்டபடி திட்டியுள்ளார்.

இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவத்தை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது மனைவியிடம் வாக்குவாதம் செய்து அவரை கீழே இறக்கிவிட்டனர். மற்றும் அவரது கணவரிடம் விசாரணை நடத்திய போது அவரிடம் கார் ஓட்டுவதற்கான உரிமம் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு அபராதம் விதித்த காவல்துறையினர் இருவரையும் எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் நிலவியது, மற்றும் இச்சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த சிலர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.