மதுரையில் பயங்கரம்! விக்ஸ் டப்பாவை விழுங்கிய குழந்தை! துடிதுடித்து பலியான பரிதாபம்!

மதுரையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடிரென விக்ஸ் டப்பாவை விழுங்கியதால் மூச்சுத் திணறி உயிரிழந்தது.


மதுரை வைத்தியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் தஷ்விக். பத்து மாத ஆண் குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த விக்ஸ் டப்பாவை எடுத்து குழந்தை விளையாடியளள்து. இதனை பெரியவர்கள் யாரும் கவனிக்கவில்லை.

பார்க்க நீல நிறத்தில் அட்ராக்டிவாக இருந்த காரணததினால் அதை ஏதோ சாப்பிடும் பொருள் என்று கருதி தஷ்விக் அதனை வாயில் வைத்துள்ளான். அதுமட்டும் அல்லாமல் அதனை அப்படியே குழந்தை விழுங்கியுள்ளான். இதனால் குழந்தை மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட அதிர்ச்சி அடைந்த தாய் குழந்தைதை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்தனர், இதனை கேட்டு குழந்தையின் பெற்றோர் கதறி அழுதனர். விக்ஸ் டாப்பா குழந்தையின் தொண்டைக்குள் சென்று அடைத்துக் கொண்டதால் இந்த விபரீதம் நேர்ந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து எஸ் எஸ் காலனி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். குழந்தை விக்ஸ் டப்பாவை விழுங்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.