முதல்நாள் பிரசாரத்தில் கெத்து காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி… கடவுள் அருளால் முதல்வர் பதவி கிடைத்தது என்று பெருமிதம்

ஒருவழியாக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியில் இருந்து தொடங்கிவிட்டார். முன்கூட்டியே முதல்வர் பழனிசாமி அறிவிப்பு செய்திருந்தபடி, எடப்பாடியாரின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட பெரியசோரகையில் இருக்கும் சென்றாயர் ஆலயத்திற்குச் சென்றார்.


கோயில் வந்த முதல்வர் பழனிசாமிக்கு தொண்டர்கள் மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, பொதுமக்களிடம் மனுக்களையும், பொன்னாடைகளையும், பூச்சென்டுக்ளையும் பெற்று கொண்டே கோயிலுக்கு செய்தார். கோயிலில் முதல்வரும், பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

எடப்பாடியாருடைய முதல் நாள் பிரசாரத்தைக் காண்பதற்கு பல்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் குவிந்தார்கள். எடப்பாடியார் செல்வதற்கு பிரத்யேக பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டு இருந்தது. ஆம், அ.தி.மு.க கொடியும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட வாகனத்தில் தமிழகம் முழுவதும் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

முதல்வர் செல்லும் இடங்களில் எல்லாம் தொண்டர்கள், பொதுமக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். வழிநெடுகிலும் வரவேற்பு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன.

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடியார், ‘எனக்கு முதல்வர் பதவி கடவுள் அருளால்தான் கிடைத்தது. எடப்பாடி தொகுதி எங்களுடைய கோட்டை. இங்கு கடந்த 42 ஆண்டுகளாக தி.மு.க. வெற்றியே பெற்றதில்லை’ என்று கெத்தாகப் பேசினார்.

முதல்நாள் பிரசாரம் தமிழகத்தையே குலுங்க வைத்துவிட்டது எனலாம்.