நள்ளிரவு..! செல்போனில் கொஞ்சல்! திடீரென விழித்த கணவன்..! பிறகு மனைவிக்கு நேர்ந்த பயங்கரம்! சென்னை திகுதிகு!

செல்போனில் அதிக நேரம் பேசியதால் ஆத்திரம் அடைந்த கணவர் மனைவியை தீர்த்துக் கட்டிய அதிர்ச்சி சம்பவம் தலைநகர் சென்னையில் நடைபெற்றுள்ளது.


சென்னை திருவொற்றியூரில் ஏழுமலை, வனிதா தம்பதியினர் கடந்த 15 வருடங்களாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஏழுமலை டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வனிதா அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவருடன் அதிகநேரம் செல்போனில் பேசியதாக தெரிகிறது. இதை ஏழுமலை கண்டிக்க இதனால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரம் அடைந்த கணவர் வனிதாவின் தலையில் பூரிக் கட்டையால் அடித்துள்ளார்.

இதில் அவரின் தலையில் காயம் ஏற்பட்டதால் மாத்திரை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், சம்பவத்தன்று தலை வலி என கூறிய வனிதா மயங்கி விழுந்துள்ளார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் உடல் நலம் சரியில்லாமல் வனிதா இறந்ததாக உறவினர்களிடம் ஏழுமலை தெரிவித்துள்ளார். ஆனாலும் வனிதாவின் தந்தை குப்புசாமி, தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி சொந்த ஊரான திருவண்ணாமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் வனிதாவின் உடற்கூறு ஆய்வறிக்கையில் வனிதாவின் மரணம் இயற்கை அல்ல, அவரை உருட்டுக்கட்டையால் தாக்கியதால் இறந்துவிட்டதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஏழுமலையிடம் போலீஸார் விசாரித்தபோது, வனிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 10 நாட்களுக்கு பின்னர் ஏழுமலை கைது செய்யப்பட்டுள்ளார்.