ரோட்டுல பள்ளம் பாத்து இருப்பீங்க..! ஒரு பைக்கே உள்ளே விழும் குளம் பாத்து இருக்கீங்களா? அதிர்ச்சி வீடியோ உள்ளே!

சென்னையில் மழைகாலம் வந்தாலே போதும் லேசான தூரலுக்கு சாலையில் ஆறு பெருக்கெடுத்து ஓடும் அதிலும் நல்ல மழை பெய்தா ஊரே வெள்ளம் வந்த காடு போல தான் இருக்கும் .


டிசம்பர் மாதம் சொன்னாலே சென்னை பக்கம் உள்ள மக்களுக்கு ஒரு பீதி உண்டு, ஏன்னா கடந்த சில வருடங்களாக அந்த மாதத்தில் மழை நம்மல வைச்சு செய்திருக்குன்னு எல்லோருக்கும் தெரியும் . 

இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக வழக்கம் போல மழை தொடங்கியது, இதில் சமூக வலை தளத்தில் இந்த வீடியோ செம்ம வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

அப்படி என்ன நடந்துடுச்சுன்னு பார்த்தா, ஆரம்பத்தில் இரண்டுப்பேரு நின்னு ரோடுல தேங்கி இருக்கும் தண்ணீரில் இருந்து எதையோ எடுக்க பார்க்குறாங்க, நாமளும் ஏதோ பர்சு , இல்ல அந்த அளவுக்கு சின்னதாக ஏதாவது விழுந்திருக்கும்ன்னு நினைச்சு பார்த்துட்டு இருக்கும் போது தான், அந்த சீன் வருது.

அதாவது சின்னதா ஏதோ எடுப்பாங்கன்னு நினைச்சா, அந்த தண்ணீரில் இருந்து பைக்கைதே தூக்கி எடுக்கும் போது தான் ஒரு நிமிஷம் ஆடிப்போயிருவோம். ஊருக்குள்ள ஹெல்மெட் போடலன்னா, சரியான ஆவணங்கள் இல்லைன்னா பெனாலிட்டி மட்டும் ஆயிரகணக்கில் போடுறீங்க ஆனா சாலை மட்டும் இந்த அளவில் தான் இருக்குமா? 

ஒருபக்கம் சமூக வலைதளங்களில் விமர்சனக்கள் எழ மற்றொரு பக்கம் இந்த மாதிரியான சாலைகளில் ஆழம் தெரியாமல் யாராவது தவறி விழுந்தா உயிருக்கே ஆபத்து ஆகிடாதா என்ன அசால்ட்டுன்னு மற்றொரு பக்கம் ஆவேசமகுறாங்க நம்ம மக்கள் .