ஸ்பெயின் நாட்டிற்கு செல்லும் சென்னை திருநங்கை நமிதா மாரிமுத்து! சூப்பர் காரணம்..! என்ன தெரியுமா?

திருநங்கைகளுக்காக நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்திய நாட்டின் சார்பில் திருநங்கை நமீதா அம்மு பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


சென்னை ராயப்பேட்டையில் மாரிமுத்து வெண்ணிலா தம்பதிக்கு பிறந்தவர் நமிதா. திருநங்கையான தற்போது மாடலிங் செய்கிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 2014-ம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வான நமிதா, 2015-ல், ‘மிஸ் கூவாகம்’ பட்டம் பெற்றவர். 2017ல், பெங்களூரில் நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றார். 2018-ல், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்றார். 

ஸ்பெயின் நாட்டில் நடக்கும் திருநங்கைகளுக்காக நடக்கும் உலக அழகி போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்க பார்சிலோனா நகரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

தனக்கு சிறு வயதில் இருந்தே மாடலிங் மீது ஆர்வம் உண்டு எனவும் அதற்கான திறமையை வளர்த்துக் கொண்டதாகவும் தெரிவித்தார் நமிதா. திருநங்கைகளுக்கான உலக அழகி போட்டி 8 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. முதன் முறையாக இந்தியா சார்பில் தான் பங்கேற்பது மிகவும் பெருமை அளிப்பதாக குறிப்பிட்டுள்ள நமிதா, தனது இந்த முயற்சிக்கு, பெரிய அளவில் யாரும், ‘ஸ்பான்சர்’ செய்யவில்லை என வேதனை தெரிவித்தார்.

பெற்றோர் முயற்சியாலும், பல்வேறு கஷ்டங்களை சந்தித்தும், இந்தப் போட்டியில் பங்கேற்பதாக கூறும் நமீதா திருநங்கைகள் சமூகம் உயர்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வேன் என தெரிவித்தார்.