இந்தியாவில் முதன்முறையாக தனியார் மூலம் இயக்கும் தேஜாஸ் ரயில் சேவை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளது.இதில் விமானத்தில் உள்ளது போலவே பணிப்பெண்களை நியமிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது.
விமானத்தை போல் கவனிப்பு! இளம் பெண்களை பணியில் அமர்த்துகிறது ரயில்வே!

இந்தியாவில் தற்போது ரயில்வே துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஐஆர்சிடிசி தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரயில் சேவையை வரும் அக்டோபர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இதன் முதல் கட்டமாக டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் தேஜாஸ் ரயில் சேவை தொடங்க உள்ளது.
இந்நிலையில் அந்த ரயிலில் விமானத்தில் உள்ளது போலவே பயணிகளின் கவனத்திற்காக பணிப்பெண்களை நியமிக்க ஐஆர்சிடிசி திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பயணிகள் வீடுகளில் இருந்து பயணத்திற்கு தேவையான உடைமைகளையும் பத்திரமாக கொண்டு செல்வதற்கு வாகன வசதிகளையும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இதற்கு கட்டணம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தாலும் பயணச்சீட்டு கட்டணங்களை குறைத்துள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.அந்த ரயிலில் பயணிகளுக்கு தேவையான கேட்டரிங் வசதிகளும் தரமான முறையில் செய்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. உயர்ரக வகுப்புகளுக்கு தனியே உணவு சமைப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேஜாஸ் ரயில் சேவையின் கட்டணத்தில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்.அது சாமானிய மக்களுக்கும் பொருந்தும் விதமாக தான் இருக்கும் என ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கவுள்ள தனியார் நிறுவனம் ஏலச்சீட்டு செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படும் என்றும் இந்த ரயில் சேவையை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.