அந்த பையனுக்கு அவ்வளவு சீன் கொடுக்காதீங்க; கெத்து காட்டும் சென்னை பயிற்சியாளர்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் அதிரடி வீரர் ரிஷப் பண்ட்டின் மீது மட்டும் தங்களது கவனம் இருக்காது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.


ஐ.பி.எல் 12வது சீசன் கடந்த சனிக்கிழமை (23.03.19) சென்னையில் துவங்கியது. இந்த தொடரில் மும்பை – டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டியில் வெறும் 27 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரியுடன் 78 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட், ஒரே போட்டியின் மூலம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் பார்வ்வையையும் தன் பக்கம் திருப்பியுள்ளார்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ள ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் சென்னை அணியுடனான நாளைய போட்டியிலும் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், ரிஷப் பண்ட் ஒருவர் மீது மட்டும் தங்களது கவனம் இருக்காது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஸ்டீபன் பிளமிங், ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டத்திற்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம், ஆனால் எங்களது அடுத்த போட்டியில் ரிஷப் பண்ட் மீது மட்டும் எங்களது கவனம் இருக்காது. ஷிகர் தவான் போன்ற வீரர்களும் ஆபத்தானவர்கள் ஆகையால் தனிப்பட்ட எந்த வீரரின் மீது எங்களது கவனத்தை செலுத்தாமல்   எங்களுடைய சொந்த பலத்தின் மீது கவனம் செலுத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.