சென்னையில் சாலை விபத்தில் உயிரிழந்த நண்பனுக்காக மாணவர்கள் சிறிய அளவிலான நினைவுத் தூண் அமைத்து அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நட்பே துணை..! சாலை விபத்தில் உயிரிழந்த ஷ்யாம்! முதலாம் ஆண்டு நினைவு நாளில் நண்பர்கள் செய்த நெகிழ வைக்கும் செயல்!

அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியை சேர்ந்த ஷ்யாம் பெற்றோர் இல்லாமல் பாட்டி சுகந்தி வீட்டில் வசித்து வந்தார். அருகில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த ஷ்யாம் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந் நிலையில் ஷியாமின் முதலாம் ஆண்டு தினத்தை அனுசரிக்கும் வகையில் சக பள்ளி மாணவர்களும், கொரட்டூர் பகுதி நண்பர்களும் ஷியாமின் நினைவாக அவனது வீட்டின் முன்பு நினைவு தூண் அமைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் அப்பகுதி நண்பர்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி முதலாம் ஆண்டு நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினர்.
பொதுவாக ஒருவர் உயிரிழந்தால் அடுத்த ஒரு மாதத்திலேயே இரங்கல், அஞ்சலி எல்லாம் முடிந்து அவரவர் வேலையை பார்க்க சென்று விடுவர். ஆனால் ஷியாம் மற்றவர்களுடன் எவ்வளவு அன்போடு பழகியிருப்பார் என்பது மாணவர்கள் தற்போது செய்துள்ள விஷயம் மூலம் தெரியவருகிறது.
மேலும் மாணவர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். மற்ற மாணவர்கள் இனிமேலாவது சாலை விதிகளை மதித்து செயல்பட்டால் ஷ்யாம் போன்ற ஒரு மரணத்தை தவிர்க்கலாம் என்பதை உணரவேண்டும். அரசாங்கம் சொல்லும் விதிகளை கடைப்பிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். அதுவே அவர்கள் ஷியாமுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகும்.