சென்னையில் திருடப்பட்ட பைக்..! தருமபுரியில் இருந்து கண்டுபிடித்த பலே இளைஞன்..! ஆனால் போலீஸ் ஸ்டேசனில் காத்திருந்த அதிர்ச்சி! என்ன தெரியுமா?

சென்னையில் திருடுபோன தனது பைக்கை ஜிபிஎஸ் மூலம் தானே கண்டுபிடித்த இந்த விவகாரத்தில் காவல்துறை அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார்.


சென்னை நந்தனத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் தருமபுரியை சேர்ந்த சந்தோஷ். இவருடைய வாகனத்தை நிறுவனத்தில் நிறுத்திவிட்டு பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றுள்ளார். இவர் பாதுகாப்பு கருதி தன்னுடைய வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி உள்ளார்.

கடந்த 18ம் தேதி அவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அது அவரது பைக் திருடப்படுவதாக அதில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஎஸ் மூலம் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் உடனே சென்னைக்கு திரும்ப முடியாது என்பதால் அந்த வாகனம் எங்கு எங்கு செல்கிறது என்பதை செல்போனிலேயே கண்காணித்தார்.

மர்ம நபரால் திருடப்படும் அந்த பைக் நந்தனத்தில் இருந்து மயிலாப்பூர், அபிராமபுரம் என ஒவ்வொரு பகுதியையும் கடந்து சென்று கோட்டூர் புரத்தில் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டுவிட்டது. பின்னர் சென்னை வந்த சந்தோஷ் நேராக அந்த இடத்திற்கு சென்று கைப்பை எடுத்து வந்துவிட்டார்.

இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து அலட்சியமாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டினார். மேலும் அவர் கால்துறையினரிடம் பேசிய ஆடியோ ஆதாரத்தை தற்போது வெளியிட்டுள்ளார் . அந்த ஆடியோவில், ``பைக்தான் கிடைத்து விட்டதல்லவா? புகார் எதற்கு கிளம்பு..!" என காவல்துறையினர் சொல்கின்றனர்.  

இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், `` ஜி.பி.எஸ் கருவி ரூ. 2,000 முதல் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஜி.பி.எஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை யார் எடுத்தாலும் செல்போனில் அலாரம் ஒலித்து காட்டிக் கொடுத்துவிடும் என்றார்.