சின்மயி தான் வேண்டும்..! ஒற்கைக் காலில் நின்று வென்று காட்டிய பிரபல இயக்குனர்! என்னாச்சு தெரியுமா?

சென்னை: சிவகார்த்திக்கேயன் நடிக்கும் புதிய படத்தில் பின்னணி பாடகி சின்மயிக்கு டப்பிங் பேச வாய்ப்பு தரப்பட்டுள்ளது.


ஹீரோ எனும் புதிய சிவகார்த்திக்கேயன் நடித்துள்ளார். பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில், கல்யாணி பிரியதர்ஷன்,  அர்ஜூன், அபய் தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அத்துடன், இப்படத்திற்காக, யுவன் சங்கர் ராஜா, 18 நிமிடங்கள் ஓடக்கூடிய பிரத்யேகமான பிஜிஎம் டிராக் ஒன்றை கம்போஸ் செய்திருக்கிறார்.

இது சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களின் பரவலான பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. டிரெய்லரை பார்த்தவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி, ஆம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பின்னணி பாடகி சின்மயி, ஹீரோ படத்தின் நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு டப்பிங் பேசியுள்ளார்.  

அவருக்கு டப்பிங் வாய்ப்பு தரக்கூடாது என்று கூறி டப்பிங் ஆர்டிஸ்ட் சங்கம் மற்றும் ராதாரவி உள்ளிட்டோர் போர்க்கொடி பிடித்து வரும் சூழலில், இயக்குனர் பிஎஸ் மித்ரன் மற்றும் தயாரிப்பாளர் கோட்டபாடி ஜே.ராஜேஷ் இந்த வாய்ப்பை அளித்துள்ளனர். இதற்காக நன்றி தெரிவித்து, சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இவ்விசயம், தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.