ரூ.60 லட்சம் சம்பளம்! தமிழனுக்கு கூகுள் நிறுவனத்தில் கிடைத்த அங்கீகாரம்!

சென்னையை சேர்ந்த ஷியாம் கூகுள் நிறுவனத்தில் பணிப்புரிய மாதம் ரூ 60 லட்சம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்ட்டு பணி நியமன ஆணையை பெற்று தெறிக்கவிட்டுள்ளார்.


சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் கே.என் பாபு ரயில்வே துறையில் பணி செய்பவர் , மனைவி ஜெயஸ்ரீ இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அமெரிக்காவில் தங்கி பணிப்புரிய, இளைய மகன் ஷ்யாம் தனது ஐ.எம் படிப்பை முடித்து விட்டு தொடர்ந்து போராடி கூகுள் நிறுவனத்தில் வரும் அக்டோபர் மாதத்தில் பணியில் சேர நியமன ஆணையைப் பெற்றுள்ளார்.

சிறு வயது முதலே கூகுள் , பேஸ்புக் நிறுவனங்களில் பணிப்புரிய கனவு கொண்ட ஷ்யாம், தனது நண்பரின் வழிக்காட்டுதலின் படி, ஜே.இ.இ தேர்வை எழுதி தேர்ச்சி பெற்று முதற்கட்டமாக ஸ்கைப் மூலம் தேர்வானவர், நேர்முக தேர்விலும் வெற்றிப்பெற்று தனது கனவை சாத்தியமாக்கியுள்ளார்.

கூகுள் நிறுவன தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை நாடே திரும்பி பார்க்கும் அளவில் சம்பளம் பெறக்கூடியவர் அந்த வரிசையில் சென்னையை சேர்ந்த ஷியாமும் இடம்ப்பிடித்துள்ளது பாராட்டிற்குரியது. அதாவது வருடத்திற்கு ஷ்யாமுக்கு கிடைக்கப்போகும் சம்பளம் ரூ.60 லட்சம் ஆகும்.

மேலும் சதா பேஸ்புக், வாட்சப், டிக் டாக் என சமூக ஊடகங்களில் மூழ்கி தவறான வழிகளில் ஈடுபட்டு வாழ்வைத் தொலைக்கும் இளைஞர்களுக்கு இடையே ஷியாம் ஒரு  முன் மாதிரியாக உள்ளார், இதனால் ஷியாமுக்கு சமூக வலைதலங்கள் மூலம் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.