சென்னையில் பள்ளிக்குச் செல்ல பயந்து சுற்றிக்கொண்டிருந்த மாணவிகளை கடத்திச் சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதான் தாலி கட்டிட்டமே..! இனிமே என்ன வேணும்னாலும் செய்யலாம்..! சிறுமிகளை லாட்ஜூக்கு அழைத்துச் சென்ற விபரீத இளைஞர்கள்!

சென்னை கண்ணகி நகர் பகுதியில் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் ஆசிரியருக்கு பயந்து பள்ளிக்கு வெளியே அங்குமிங்கும் சுற்றிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த ஆட்டோ ஓட்டுநர்கள் அந்த 3 மாணவிகளிடம் பேச்சுக் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த மாணவிகளை ஆட்டோவில் அருகில் உள்ள கடற்கரைக்குஅழைத்து சென்று விளையாடி உள்ளனர். பின்னர் பள்ளி நேரம் முடிந்ததும வீட்டருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
அதே போல மறுநாளும் அந்த மாணவிகளை ஆட்டோவில் ஏற்றிச் சென்றுள்ளனர். பள்ளிக்கு செல்லாமல் இருப்பது வீட்டிற்கு தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என மாணவிகள் கூற, அதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் வெளியூருக்கு சென்று கல்யாணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதற்கு 2 மாணவிகள் சம்மதித்துவிட 3வது மாணவி மட்டும் சுதாரித்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் 2 மாணவிகளையும் கும்பகோணம் அழைத்து சென்று தாலி கட்டியுள்ளனர். பின்னர் அங்கிருந்து திருப்பூர் சென்று லாட்ஜில் அறை எடுத்து தங்கி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதற்கிடையே மாணவிகள் காணவில்லை என போலீசில் புகார் அளிக்க போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆட்டோ டிரைவர்கள் குறித்த தகவலை 3வதாக வீட்டிற்கு சென்ற மாணவி தெரிவித்துள்ளார். இதையடுத்து செல்போன் சிக்னலை வைத்து திருப்பூர் விரைந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர்கள் விஜயகுமார், ஏற்கனவே திருமணம் ஆன கனகராஜ் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்வில் 3 மாணவிகளும் குறைவான மதிப்பெண் எடுத்ததால் அவர்கள் சரியாக படிப்பதில்லை என பெற்றோரிடம் தெரிவிப்பதற்காக அழைத்து வருமாறு ஆசிரியர் கூறியுள்ளார். இதற்கு பயந்து போன மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி திரிந்ததால் கயவர்களால் சீரழிக்கப்பட்டுள்ளனர். ஒரு உண்மையான செய்தியை எழுதுவது எளிது. ஆனால் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் முன்கூட்டியே எழுதி வைத்து வரும் செய்திகளை நீங்கள் நம்புவதுபோல் சொல்வதற்கு கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது.