வீட்டு வாடகை கேட்ட கள்ளக் காதலிக்கு கள்ளக் காதலால் ஏற்பட்ட கொடூரம்!

என்னை மிரட்டியதால், கள்ளக்காதலியை போட்டுத் தள்ளிவிட்டேன் என்று, சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.


கொரட்டூரை சேர்ந்தவர் தேவி (39 வயது). இவரது கணவர் சங்கர் சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்டார். தேவிக்கு 2 மகள்கள். அவர்களுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில், வேப்பேரியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் தங்கராஜ் என்பவருடன் தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்கராஜ், ஏற்கனவே திருமணமானவர் ஆவார். 

இவர்கள் 2 பேரும், கணவன், மனைவி போல கடந்த 6 ஆண்டுகளாக, வாழ்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக, வீட்டு வாடகை தராமல் தங்கராஜ் இருந்துள்ளார். இதன்போது, பணம் கேட்டு தேவி தகராறு செய்யவே, தங்கராஜ் உரிய பதில் சொல்லவில்லை எனக் கூறப்படுகிறது. 

இந்த சூழலில்தான், நேற்றிரவு தங்கராஜ் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதில், வாக்குவாதம் முற்றிய நிலையில், தேவியை தீயிட்டு கொளுத்திவிட்டு, தங்கராஜ் தலைமறைவாகிவிட்டார். உடனடியாக அங்கே விரைந்து வந்த கொரட்டூர் போலீசார் தேவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன்பேரில், தலைமறைவாக இருந்த தங்கராஜை கைது செய்தனர். ஆரம்பத்தில் ரிக்‌ஷா ஓட்டி வந்த தங்கராஜ், பின்னாளில் ரியல் எஸ்டேட் வேலை செய்ய தொடங்கியுள்ளார். வீட்டுச் செலவுக்கு தேவி பணம் கேட்டபோது, அதற்கு பணம் தராமல் வேண்டுமென்றே தங்கராஜ் இழுத்தடித்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த தேவி, தீ வைத்துக் கொளுத்தி விடுவேன் எனக் கூற, தங்கராஜ், அதை அவருக்கே திருப்பிச் செய்திருக்கிறார். இதனை போலீஸ் விசாரணையில் ஒப்புக் கொண்ட தங்கராஜ், தற்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார்.