சென்னையில் கர்ப்பிணி பெண் பாம்பு கடித்து இறந்த சம்பவம் குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணமாகி 6 மாதத்தில் 3 மாத கர்ப்பம்! வாசலில் நின்று கொண்டிருந்த கர்ப்பிணி மயங்கி விழுந்து உயிர்விட்ட பரிதாபம்! அதிர்ச்சி காரணம்!

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள நசரத்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கண்ணப்பன். இவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு புஷ்பா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் புஷ்பா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
வழக்கமாக கணவர் வேலைக்கு சென்றவுடன் புஷ்பா வீட்டில் தனியாகத்தான் இருப்பார். அப்படி நேற்றைய தினம், புஷ்பா தனியாக இருந்தபோது அக்கம்பக்கத்தார் இடம் பேசிக்கொண்டிருந்தார். அச்சமயம் அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு புஷ்பாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது அக்கம் பக்கத்தினருக்கு தூக்கிவாரிப்போட்டது. இதுகுறித்து கணவர் கண்ணப்பனுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
மேலும், புஷ்பாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர். வீட்டில் தனியாக இருந்த பெண் திடீரென இப்படி உயிரிழந்ததால் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.