திருச்சியில் இளம்பெண்ணை உல்லாசத்திற்காக ஓட்டலுக்கு அழைத்து வந்த அரசியல் பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் பெண்ணுடன் சொகுசு ஓட்டல் அறையில்சிக்கிய அரசியல் பிரமுகர்! திருச்சி சம்பவம்!

சென்னை மண்ணயடி பகுதியைச் சேர்ந்தவர் நஜீம் (35) இவர் நேற்று முன்தினம் திருச்சியில் ஜங்ஷன் ராயல் ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல விடுதி ஒன்றில் இரவு 10.30 மணிக்கு ஒரு இளம் பெண்ணோடு சென்று அங்கு ரூம் புக் செய்துள்ளார். விடுதியில் பணியாற்றும் பணியாளர் அவர்களிடம் தங்களது பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை எழுதுமாறு கூறியுள்ளனர்.
அப்போது அவர்கள் தாங்கள் கணவன் மனைவி என்று கூறிக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில் அந்த ஓட்டலில் மேலாளராக இருக்கும் தமிழரசன் என்பவருக்கு அவர்கள் கொடுத்த தகவல்கள் தவறாக தெரிகிறது என எண்ணியுள்ளார். அந்த நபர் கூட்டி வந்த பெண்ணிற்கு வயது சுமார் 23 தான் இருக்கும் ஆனால் அந்தப் பதிவேட்டில் அவருக்கு வயது 30 என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரின் நடத்தையில் சந்தேகப்பட்ட ஹோட்டல் மேலாளர் தமிழரசன் இதுகுறித்து கண்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார் இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவர் தங்கியுள்ள அறைக்குச் சென்று அவர்களை வெளியே வரச்சொல்லி விசாரணை நடத்தியுள்ளனர். போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு முன்னும் பின்னுமாக பதில் அளித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கு விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த நபர் சென்னை பகுதியைச் சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர் என்பது தெரியவந்தது. அவர் மீது ஏராளமான குற்றங்கள் இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட பெண் அங்கு உள்ள ஒரு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் நஜீம் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இது மாதிரியாக தனியார் விடுதியில் இளம்பெண்களை அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபடுவதாக தெரிந்தால் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும்படி அங்குள்ள அனைத்து விடுதிகளுக்கும் போலீசார் நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். இச்சம்பவம் ஜங்சன் ரோடு பகுதியில் உள்ள அனைத்து தனியார் விடுதிகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.