மனிதநேயத்தை பறைசாற்றும் வகையில், காப்பக குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கி சென்னை போலீசார் அனைவருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளனர்.
இப்படியும் சில போலீஸ்! ஆதரவற்ற குழந்தைகளை நெகிழ வைத்த செயல்! குவியும் பாராட்டு!

சென்னை தாம்பரம் லோகநாதன் தெருவில் செயல்பட்டு வரும் காப்பகத்தில், 100 மாணவ, மாணவியர் உள்ளனர். இந்நிலையில், கோடை விடுமுறை முடிய உள்ள நிலையில், இந்த காப்பகத்தில் வளரும் மாணவ, மாணவியருக்கு உதவ, தாம்பரம் சரக போலீசார் முடிவு செய்தனர். இதன்பேரில், தாம்பரம், குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் அனைவரும் தங்களால் முடிந்த நிதி உதவி செய்தனர். அந்த பணத்தில், இந்த காப்பக குழந்தைகளுக்கு தேவையான ஸ்கூல் பேக், குடிநீர் போத்தல், நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்டவற்றை போ
லீசார் வழங்கினர். அத்துடன், அவர்களுக்குத் தேவையான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதற்கான விழா இன்று (மே 16) நடைபெற்றது. அப்போது, இணை கமிஷனர் மகேஸ்வரி பங்கேற்று, குழந்தைகளுக்கு பொருட்களை வழங்கினார்.
கல்வி உபகரணப் பொருட்களை வாங்கிக் கொண்ட குழந்தைகள் மகேஸ்வரிக்கு உருக்கத்துடன் நன்றி தெரிவிக்க, அவர் மிகவும் நெகிழ்ந்து போனார். குறிப்பாக ஒரு குழந்தை, ''உங்களால்தான் ஆன்ட்டி நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்கதான் எங்களுக்கு ரோல் மாடல். நீங்க அடிக்கடி இங்கு வரவேண்டும். ரொம்ப தேங்க்ஸ்,'' என்று கூறியபோது, அங்கிருந்த அனைவரும் நெகிழ்ந்து போனார்கள்.
ஸ்கூல் திறக்க நிலையில், குழந்தைகளுக்கு இப்படி கல்வி உபகரணங்களை வழங்க, சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கை எடுத்ததை, காப்பக நிர்வாகிகள் நன்றியுடன் பாராட்டுகின்றனர்.