சுண்டி இழுக்கும் உடையுடன் மனைவியை காட்டி செல்போன் கடையில் தகாத செயல்! வசமாக சிக்கிய நடிகர்!

சென்னை அரும்பாக்கத்தில் செல்ஃபோன் கடையில் விலை உயர்ந்த செல்ஃபோன்களை திருடிய தமிழ் நடிகரையும் அவரது மனைவியையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


சின்னத் திரை துணை நடிகரான ஆரூண் என்ற தீபக்கும் அவரது மனைவியும் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஒரு செல்ஃபோன் கடைக்குச் சென்றனர். இருவரும் செல்ஃபோன்களை பார்வையிடுவது போல நடித்துக்கொண்டிருந்த நிலையில் சேல்ஸ்மேன்கள் அசந்த நேரத்தில் தீபக் செல்ஃபோனை திருடி பைக்குள் திணிக்கும் காட்சிகள கடையில் உள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகின. 

ஒரு நடிகரின் செயலை சி.சி.டிவி. மூலம் கண்டு அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அங்குவந்த போலீசார் தீபக்கின் பையை சோதனையிட்டு கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். 

அவர்கள் இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில்  சென்னையில் மேலும் பல செல்ஃபோன் கடைகளிலும் திருட்டில் ஈடுபட்டதும், தம்பதியாகவும் டிப்டாப்பாகவும் வந்ததால் அவர்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருண்டதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு  செய்த போலீசார் தீபக்கை கைது  செய்தனர். 

விசாரணையில் மனைவிக்கு கவர்ச்சியாக உடை அணிவித்து அழைத்துச் செல்லும் தீபக் கடையில் உள்ளவர்களிடம் அவரை பேச்சு கொடுக்க வைப்பதாகவும், சுண்டி இழுக்கும் உடையில் இருக்கும் அந்த பெண்ணிடம் கடை ஊழியர்கள் கடலை போட்டுக் கொண்டிருக்கும் போத தீபக் செல்போனை ஆட்டைய போட்டு தப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.