தொழில் அதிபரை மசாஜ் செய்து மயக்கிய செவிலியர்! வைர நகையுடன் தப்பியவர் கதி இது தான்!

சென்னை தேனாம்பேட்டையில் 65 வயதுப் பெண்ணுக்கு பிசியோ தெரபி சிகிச்சைக்கு வந்த செவிலியர் 7 லட்சம் ருபாய் மதிப்புள்ள நகைகளை திருடி சிக்கிக்க்கொண்டார்.


தேனாம்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்த தொழிலதிபரின் மனைவி ராதா. 65 வயதாகும் ராதா டால்மியா மூட்டு வலி பிரச்சினைக்காக மருத்துவரை அணுகியபோது 10 நாட்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து முகவர் நிறுவனம் மூலம் சவுமியா என்ற செவிலியரை வேலைக்கு அமர்த்தினார் ராதா. 

இதையடுத்து ராதாவுக்கு ஒருவாரம் சிகிச்சை  அளித்த சவுமியா கடந்த மாதம் 18-ம் தேதி, ராதாவின் உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ராதா தான் அணிந்திருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கழற்றி பீரோவில் வைத்துவிட்டு சவுமியாவிடம் எண்ணெய் மசாஜ் செய்துகொண்டு  குளிக்கச் சென்றார்.

குளியல் அறையில் இருந்து வெளியே வந்து  பார்த்த போது சவுமியாவைக் காணவில்லை. இதையடுத்து சந்தேகத்துடன் பீரோவைத் திறந்து பார்த்த போது நகைகள் மாயமாகி இருந்தன. இது  தொடர்பான புகாரின் பேரில் வந்த போலீசார் சுற்றுவட்டார சி.சி.டி.வி.காட்சிகளை ஆய்வு செய்தபோது செவிலியர் சவுமியா பதற்றத்துடன் வேகமாக செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

சவுமியாவை வேலைக்கு அனுப்பிய முகவர் நிறுவனத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த சவுமியா, விருகம்பாக்கத்திற்கு வந்ததை செல்ஃபோன் சிக்னல் மூலம் கண்டுபிடித்த போலீசார் அங்கு சென்று  அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சவுமியா தற்போது புழல் சிறையில் நாட்களைக் கடத்திக்கொண்டிருக்கிறார். சவுமியா, அரும்பாக்கத்தில் பியூட்டி பார்லரும் நடத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.