படுக்கை அறையில் வழக்கறிஞரின் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்! கேட்போரை அதிர வைக்கும் சம்பவம்!

சென்னை: தங்களது மகளை அடித்துக் கொன்றுவிட்டதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார் எழுந்துள்ளது.


சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்தவர் 34 வயதாகும் சாந்தி. இவர், 11 ஆண்டுகளுக்கு முன்பாக, பிரேம் ஆனந்த் என்ற வழக்கறிஞரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஆனால், சாந்தியை அவரது கணவர் அடிக்கடி சித்ரவதை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கணவர் பிரேம் ஆனந்த், அவரது சகோதரர்கள் என அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ளதால், தனக்குள்ள பிரச்சனைக்கு முடிவு தெரியாமல் சாந்தி தினமும் சித்ரவதை சந்தித்து வந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சாந்தி, தனது படுக்கையறையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதன்பேரில், சாந்தியின் தாய் விஜயலட்சுமி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், தனது மகளை வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து பிரேம் ஆனந்த் கொன்றுவிட்டார், எனக் கூறியுள்ளார். ஆனால், பிரேம் ஆனந்த் தரப்பிலோ சாந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகின்றனர். 

சில ஆண்டுகளுக்கு முன்பாக, சாந்தியும், பிரேம் ஆனந்தும் விவாகரத்து கேட்டு விண்ணப்பித்து, இறுதியாக நீதிமன்ற தலையீட்டின் பேரில் திரும்பவும் ஒன்றாக சேர்ந்து வாழ தொடங்கினர். திடீரென சாந்தி மரணமடைந்ததால் சந்தேகத்தின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.