முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு! இல்லற வாழ்வில் ஈடுபட முடியாத துயரம்! கணவன் எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சியில் உறைந்த மனைவி!

சென்னையில் நீண்ட நாட்களாக படுத்த படுக்ககையாக இருந்த நபர் விரக்தியின் உச்சிக்கே சென்று தனது மர்ம உறுப்பை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.


எம்ஜிஆர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராம் கடந்த 2015ம் ஆண்டு மரம் ஏறும் போது தவறி விழுந்தார். அதனால் அவரது முதுகுத் தண்டு பாதிக்கப்பட்டு எங்கும் செல்ல முடியாமல் படுத்த படுக்கையானார். 3 பிள்ளைகளையும் கணவரையும் காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையில் அவரது மனைவி கல்யாணி வேலைக்கு செல்லத் தொடங்கினார். 

நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக யாருக்கும் உதவி இல்லாமல் இருப்பது ராம் மனவேதனையிலும், உடல் வேதனையிலும் அவதிப்பட்டு வந்தார். இனிமேலும் தான் பாரமாக இருக்கக் கூடாது என நினைத்த அவர் படுக்கைக்கு அருகில் பழம் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக் கொண்டார்.

பின்னர் வலி பொறுக்க முடியாமல் அலறத் தொடங்கினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர் ரத்த வெள்ளத்தில் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீசார் அவரது மனைவி கல்யாணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்களாக கணவர் வேதனையில் புலம்பி வந்ததாகவும், தன்னால் யாரும் கஷ்டப்படக்கூடாது என தெரிவித்ததாகவும் கூறினார் கல்யாணி. எத்தனை நாட்கள் ஆனாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என ஆறுதல் கூறியும் இப்படி ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டதாக தெரிவித்தால் கல்யாணி