வாட்டர் பாட்டிலில் கொசு..! காசு கொடுத்து மலேரியா வாங்குறதா? வண்ணாரபேட்டை அதிர்ச்சி!

சென்னையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலில் கொசு மிதப்பதை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.


சென்னை புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் சாய்குமார் என்பவர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் வாடிக்கையாளர் ஒருவர் அவரது கடையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் பாட்டில் உள்ள தண்ணீரை குடிக்கும் போது அதில் கொசு இருப்பதை பார்த்து வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுதொடர்பாக கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் கடை ஊழியர் தண்ணீர் பாட்டிலை உடனடியாக பெற்றுக்கொண்டு அந்த பாட்டிலை வினியோகம் செய்த ஏஜென்சியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தண்ணீர் பாட்டில் விற்பனையாளர் சரியாக பதில் அளிக்காத நிலையில் வாடிக்கையாளர் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.