ஒரே நேரத்தில் 3 சிறுமிகள் பலாத்காரம்! சிக்கிய சென்னை இளைஞன் சின்னாபின்னமான சம்பவம்!

சென்னையில் சிறுமிகள் 3 பேருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த நபருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


சென்னை எழும்பூரில் விஜய் என்ற நபர் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுமிகள் மூவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஒரே நேரத்தில் மூன்று பேரையும் ஆடைகளை களைந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளான். இதனால்  பாதிக்கப்பட்ட சிறுமிகள் அவர்களின் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளனர்.

உடனே அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர்கள் அருகிலுள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் விஜய் என்பவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் விஜய் மீதான புகார் உறுதி செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு சென்னை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் விஜய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவனுக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் 21 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.